தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாட்டில் வணிகர்களுக்காக, வணிகர்களை காக்கவும், வணிகர்களுக்காக குரல் கொடுக்கவும் வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து பேரவை தலைவர் த. வெள்ளையன் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை. பேரவையின் தலைவராக திரு.த. வெள்ளையன் அவர்களும், பொதுசெயலாளராக S.சௌந்தர்ராஜன் அவர்களும், பொருளாளராக, நியுராயல் S.பீர்முகமது அவர்களும், அனைத்து மாவட்டங்களிலும் நேர்மையான, திறமையான மாவட்ட நிர்வாகிகளை கொண்டு செயல்படும் சங்கமாகும்.
எங்கள் சங்கம் தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம்.(சில சங்கங்களைப் போல் மத்திய கம்பெனிகள் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டது அல்ல) மேலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை எந்த காலத்திலும் அரசியல் சார்ந்து, அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக முடிவு எடுத்தது இல்லை, எந்த சூழ்நிலையிலும் வணிகர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மேற்கொள்ளும்.
முன்பு தமிழ்நாடு பொது விற்பனை வரி சட்டத்தில் இருந்து, VAT மதிப்பு கூட்டு வரி வந்த போது முழுமையாக அதை எதிர்த்தோம், தற்போது GST சரக்கு மற்றும் சேவை வரி மூலம் வணிகர்களை தொல்லைப்படுத்துவதையும் எங்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழுமையாக எதிர்த்து போராடி வருகிறது.
எனவே தமிழக வணிகர்கள் அரசியல் சார்பில்லாத நமது சங்கத்தில் அனைவரும் சேர்ந்து தமிழக வணிகர்களின் குறைகளை வென்றெடுக்க வருமாறு உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


